ஆன்லைனில் அமைதியாக நடந்து கொண்டிருக்கும் சிறுதொழிலில் ஒன்று டொமைன் புக்கிங். டொமைன் புக்கிங்க் தொழிலுக்கு பெரிதாக பிறர் துணை தேவையில்லை. டொமைன் புக்கிங்க் தொழிலில் தனி நபராக நாமே தினம் 30 நிமிடம் ஒதுக்கினால் கூட மாதம் 500$-க்கு மேல் வருவாய் பார்த்துவிடலாம், அத்தனை எளிதான தொழில்.
எந்தத் தொழிலாக இருந்தாலும் அதில் நமது திறனை வளர்த்துக் கொண்டால் எளிதாக சம்பாதித்துவிடலாம் என்பது நமக்குத் தெரியும், அதிலும் இது சிறுதொழில் வகையில் வருவதால் அத்தனை பெரிய முதலீடும் தேவையில்லை, ரூ.7000 இருந்தால் போதும் விரைவாக பல பல ஆயிரங்களைச் சம்பாதிக்க ஆரம்பித்துவிடலாம்.
ஆன்லைன் பிசினஸ் என்று இறங்கிய காலத்திலிருந்தே அதிகம் வருவாய் கொடுக்கக்கூடியது எது..எது.. என்று தேடி ஓடிக்கொண்டிருக்கும் நான்... இந்த டொமைன் புக்கிங்க் தொழிலையும் அறிந்து கொண்டு சில யூக்திகள் தெரியாத காரணத்தினால், ரூ.5500 முதலீடு செய்து கோட்டைவிட்டுவிட்டேன்.
ஒர் தொழில் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கிறது என்றுச் சொன்னால் கண்டிப்பாக அங்கே வெற்றியாளர்களும் இருப்பார்கள், அப்படியிருக்க நாம் தோல்வியுறுகிறோம் என்றுச் சொன்னால், அங்கே வெற்றியாளர் அறிந்திருக்கும் யூக்திகளை நாம் அறிந்திருக்கவில்லை என்பதே உண்மையாக இருக்க முடியும்.
ஆன்லைனில் மாதம் இலட்சம் ரூபாய் வருவாய் ஈட்ட வேண்டும் என்றுச் சொன்னால் கண்டிப்பாக தொழிலே துணை கொடுக்கும் என்ற அடிப்படையில் மீண்டும் டொமைன் புக்கிங்க் தொழில் பற்றி ஆராயத் தொடங்கினேன். ஏனெனில் இதிலேயே முதலீடு என்பது மிகக் குறைவு, பணி நேரம் குறைவு, பிறர் பணிக்குத் தேவையில்லை மற்றும் மிக அதிக இலாபம்.
டாட் காம் டொமைன் விலை ரூ.660 மட்டுமே. ஆன்லைனில் சில டொமைன்கள் ரூ.6000 முதல் ரூ.2,00,000(இரண்டு இலட்சம்) வரை கொடுத்தால் தான் வாங்க முடியும் என்ற நிலையில் அதனை சிலர் புக்கிங் செய்து வைத்திருப்பார்கள். இரண்டு இலட்சம் கொடுத்து டொமைனை வாங்கிவிட்டோம் என்றுச் சொன்னால், அதன்பின்னர் வருடத்திற்கு ரூ.660 என்ற அடிப்படை விலையிலையே ரிஜிஸ்டரர் கம்பெனியில் புதிப்பித்துக் கொள்ளலாம். அதாவது, இங்கே ரூ.660-க்கு டொமைனை ரிஜிஸ்டர் செய்து வாங்கிய.. அந்த டொமைன் உரிமையாளரிடமிருந்து ரூ.2,00,000 கொடுத்து அந்த டொமைனை நாம் வாங்குகிறோம் என்பதுதான் உண்மை.
உதாரணத்திற்கு http://bigrock.in/ சென்று பார்த்தீர்கள் என்றால் internetgovernanceforum.com என்ற டொமைன் Rs. 3,439,996/YR -க்கு விற்கப்படுகிறது. அதே வேறு டொமைன் விற்பனைத் தளங்களில் தேடினால் விற்பனைக்கு கிடைக்காது, ஆனால் அதனை ரிஜிஸ்டர் செய்தவர் விற்பனைக்கு வைத்திருக்கிறார், தாங்கள் வாங்க விரும்பும் விலையினைச் சொல்லுங்கள் என்று கேட்பதோடு... கண்டிப்பாக வாங்க விருப்பம் இருக்கிறது என்பதனையே ஒர் சிறிய கட்டணத்தினைக் கட்டியே நாம் சொல்ல முடியும். அதன் பின்னர் ப்ரவீன் அந்த விலைக்கு தருகிறேன் என்பதும் மறுப்பதும் அவரது விருப்பம்.
டாட் காம் டொமைன் ரூ.660-க்கு கிடைக்கும் பொழுது ஏன் ஒருவர் இரண்டு லட்சத்திற்கு வாங்க வேண்டும்?? என்றுக் கேட்டீர்கள் என்றுச் சொன்னால்... ஆன்லைனின் முகவரியே டாட் காம், டாட் நெட், டாட் பிஸ், டாட் இன்போ என்றுச் சொல்லக் கூடிய டொமைன் தான்.
ஒருவர் பெயர் சிவா என்றுச் சொன்னால் அதனைப்போல் சிவா என்ற பெயரிலே மற்றொருவர் இருக்க முடியும். ஆனால் ஆன்லைனில் அதிலும் ஒருவர் India.com என்ற டொமைனை ரூ.660 கொடுத்து ரிஜிஸ்டர் செய்து வாங்கிவிட்டார் என்றுச் சொன்னால் மற்றொருவர் india.com என்று ரிஜிஸ்டர் செய்ய முடியாது. அப்படியிருக்கும் பொழுது அந்த உரிமையாளரிடமிருந்தே விரும்புவர் வாங்க முற்பட வேண்டும். அங்கே உரிமையாளர் 2 இலட்சம் கொடுத்தால் தான் கொடுப்பேன் என்றுச் சொன்னால்.. வேறு வழியில்லை. ஒன்று வாங்கிக் கொள்ள வேண்டும் அல்லது அந்த ஆசையை மறந்திட வேண்டும்.
அனைவருமே ஆன்லைன் உலகிற்கு வந்து கொண்டிருக்கும் வேளையில்.. ஒவ்வொருவரும் தங்களது தொழிலுக்கும் ஆன்லைன் வெப்சைட் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள் அல்லது இருக்க வேண்டியது கட்டாயம் என்ற நிலைக்கு நாளைத் தள்ளப்படுவார்கள் என்ற நிலைக்கு உலகம் மாறிக் கொண்டிருக்கிறது மற்றும் தனிநபர்களும் தனக்கான வெப்சைட் வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள்... பலர் கொண்டிருக்கிறார்கள்.
ஒவ்வொருவரும் தங்களது தொழில் பெயரிலேயே டொமைன் பெயர் ரிஜிஸ்டர் செய்ய விரும்புவர்கள், பெர்சனல் ப்ளாக் சைட் வைத்துக் கொள்ள விரும்புவார்களும் தங்களது பெயரில் அல்லது தமக்குப் பிடித்தமான பெயரில் ரிஜிஸ்டர் செய்ய விரும்புவார்கள். ஒர் ஊருக்கான பொது வெப்சைட் ரிஜிஸ்டர் செய்ய வேண்டும் என்றுச் சொன்னாலும் முதலில் அந்த ஊரின் பெயரில் டொமைன் இருக்கிறதா என்றுதான் பார்ப்பார்கள்.
இப்படி ஒவ்வொருவரும் தங்களது தொழில் அல்லது விருப்பப் பெயரிலான டொமைனையே ரிஜிஸ்டர் செய்ய விரும்பும் பொழுது.. அந்த டொமைனை ஏற்கனவே ஒருவர் ரிஜிஸ்டர் செய்து விற்பனைக்கு வைத்திருந்தார் என்றுச் சொன்னால்.. அவரிடம் வாங்கவும் முயற்சிப்பார்கள். இங்கே வாங்குபவரின் வாங்கும் சக்திக்குத் தகுந்தாற்போல் அந்த டீல் விரைவாக முடியும். ஆமாம், பலகோடி சம்பாதிப்பவர்க்கு இலட்சம் பெரிய விடயமாக இருக்காது.. உடனே இலட்சத்தினைக் கொடுத்து வாங்கிவிடுவார். பல இலட்சம் சம்பாதிப்பவர்க்கு சில ஆயிரங்கள் பெரிதாகத் தெரியாது... 10000 என்றுச் சொன்னால் வாங்கிவிடுவார்.
மேலும் குறிப்பாக கவனிக்க வேண்டியது, சர்ச் இன்ஜின் முதன் முதலில் கீவேர்டு பார்ப்பது டொமைனில் தான், அதனை கையில் எடுத்துக் கொண்டே வெப்சைட்டின் ஆர்ட்டிகள் பார்க்கிறது. ஆகையால் எப்பொழுதுமே பொதுப்படையான பெயர்களுக்கு டிமாண்ட் இருந்து கொண்டே இருக்கும். அதுவும் இப்பொழுது எல்லாம் எளிதில் நேரடியாக டாட் காம் டொமைன் கிடைக்காது. எ.கா onlinejob.com என்ற பெயரில் டொமைன் வாங்க முடியாது. இதனை ரிஜிஸ்டர் செய்து வைத்திருப்பவர் 10000$-க்குக் கூட விற்பனை செய்து கொள்ள முடியும். ஆனால், அவர் வெப்சைட் மூலம் அதிகம் சம்பாதித்துக் கொண்டிருந்தால் அந்தப் பெயரினை விடவேமாட்டார். ஏனெனில் கூகுளுக்கு சைட்டை கொண்டு போவதே கஷ்டம். அதுவும் மக்கள் மனதில் உள்ள onlinejob என்றப் பெயரினை விட்டுவிட்டால் கிடைக்குமா? ஆகையால் அவ்ளவு சீக்கிரத்தில் பழைய டொமைன் விற்பனைக்கு வரவும் செய்யாது.
நமக்குத் தெரிந்த probux.com என்ற டொமைன் தற்பொழுது 8000$-க்கு சந்தையில் விற்பனைக்கு வந்துவிட்டது. பலரை ஏமாற்றிய இந்த டொமைனுக்கு 10$ என்ற மதிப்பு எப்படி 8000$-க்குச் சென்றது என்றுச் சொன்னால்... அது பெற்று வைத்திருந்த பேக்லிங்க்ஸ் மற்றும் ட்ராபிக் ரேங்க். ஆம், ரெபரல் லிங்க் என்று ஒவ்வொருவரும் பல தளங்களில் அதன் லிங்கினைக் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள் என்பதோடு அந்த லிங்க் மூலம் இன்றும் சிலர் அத்தளத்தினை பார்க்க நேரிடலாம். பேக்லிங்க்ஸ் & ட்ராபிங்க் ரேங்க் மூலம் புதிய ஒனர் விரைவாக அந்த இடத்தினை பெற்று வருவாய் நிலைக்குச் சென்றுவிடலாம் என்பதனாலேயே அதனை வாங்கிவிடுவர். ஆனால் probux பொதுப்பெயரும் இல்லை.. அதுமட்டுமில்லாமல் பலரை ஏமாற்றி மூடப்பட்டது என்பதனால் எவரும் வாங்கவில்லை. அதைப்போல் ப்ரோபக்ஸ் ஒனரின் முந்தைய தளமான onbux-ம் மார்க்கெட்டில் இருக்கிறது.. விலை போகவில்லை. ஆனால் வரும் விசிட்டர்ஸ் மூலம் கிடைக்கும் விளம்பர க்ளிக்கின் வருவாய் வரும்.
India.in , onlinebusiness.com, onlinejob.com , forex.com போன்ற பொதுப்படையான டொமைன் பெயர் என்றால் உடனே 10000$ என்றாலும் விற்றுப்போகும்.
இப்படியான பொதுப்பெயர்கள் தான் ஏற்கனவே ரிஜிஸ்டர் செய்திருப்பார்களே... இதுதான் கிடைக்காதே பின் எப்படி இதில் வருவாய் பார்ப்பது என்பதனைப் பற்றித்தான் பார்க்க இருக்கிறோம்.
பலர் இன்னும் தனது கம்பெனி பெயரில் டொமைன் ரிஜிஸ்டர் செய்யமால் இருப்பார்கள். அப்படியான பெயர்களை தேடிக் கண்டுபிடித்து டாட் காம் டொமைன் ரிஜிஸ்டர் செய்து, SEO முறைப்படி முகப்பினை வைத்துக் கொண்டால்... நபர் கூகுளில் தேடும் பொழுது முதலாவதாக நமது டொமைன் வந்து நிற்கும். அதனை ரிஜிஸ்டர் செய்ய முடியாத காரணத்தினால், அவர் நம்மிடருந்து வாங்க முற்படலாம்... இங்கே விலையினை அந்த பெயர்க்குத் தகுந்தவாறு புத்திசாலித்தனமாகக் கொடுத்துக் கொள்ள வேண்டும். எல்லாத்துக்கும் ஒர் இலட்சம் கூடாது.... 6000 ரூபாய் கிடைத்தால் கூட 1000%... பத்து மடங்கு இலாபம் என்பதால்... டொமைனை வாங்கக்கூடியவர்களின் சக்திக்குத் தகுந்தவாறு விலையினை நிர்ணயித்து விற்றுக் கொள்ளலாம். பெரிய கம்பெனியின் பெயர் டொமைன் என்றால் ... 20000 ... 50000 என்று விற்று இலாபத்தினைப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இங்கு நான் சொல்லும் அனைத்து தகவலும் 2-மே-2015 நிலவரப்படி கொடுக்கிறேன்... இதனை நீங்கள் சற்று புரிந்து கொண்டு மேலும் பல விடயங்களை படியுங்கள். ஏனெனில்.. kuruvi -ன்னு சொன்னார்.. ரிஜிஸ்டர் செய்து ஒர் லம்பான தொகைக்கு விற்றுவிடலாம் என்றுப் போனால் அங்கே அந்த டொமைனையே காணுமே என்று எல்லாம் சொல்லக் கூடாது.
ரிஜிஸ்டர் செய்யப்படாத, கம்பெனி பெயர், வளர்ந்து வரும் ஊர் பெயர் மற்றும் பொருள் தரக்கூடிய தமிழ் மற்றும் அறிந்த பிறமொழிப் பெயரில் நல்லப் பெயர்களை நாம் ரிஜிஸ்டர் செய்து கையகப்படுத்திக் கொண்டு விற்பனை செய்தல் என்பது ஒர் பார்முலா.
மற்றொன்று deleted domain லிஸ்ட்க்கு வரக்கூடிய டொமைன்களை Expired Domain லிஸ்ட் வழியாக அறிந்து காத்திருந்து முதலிலேயே கைப்பற்றிக் கொள்ளுதல்.
பெயரினைத் தேடித் தேடி எடுத்தாலும் பொதுப் பெயர்கள் பல முன்பே ரிஜிஸ்டர் செய்திருப்பதால்.. நமக்கு கிடைப்பது என்பது தற்பொழுது வளர்ச்சிப் பெற்று வரும் கிராமங்களில் கிடைக்கும் பெயரினைக் கொண்டு... அவர்களை மையமாக மட்டுமே வைத்து ஒர் பத்து மடங்கு இலாபத்தினைப் பார்க்க முடியும்.
ஆனால் பொதுப் பெயரில் கிடைத்துவிட்டால் உலக அளவிலான மார்க்கெட்டில் பேரம் பேசி 10000% கூட இலாபம் பார்த்துவிடலாம். அதாவது 10$-க்கு வாங்கிய டொமைனை 10000 டாலர்க்கு கூட எளிதாக விற்றுவிட முடியும்.
அப்படி பொதுப்படையான டாட் காம் டொமைனை வாங்க வேண்டும் என்றால் டெலிட் ஆகும் நேரத்தினைப் பார்த்துத்தான் வாங்க முடியும். டொமைன் 1 வருடம்.. 2 வருடம்.. 5 வருடம்.. 10 வருடம் என்ற கால கணக்கில் ரிஜிஸ்டர் செய்யப்படுவதால் இங்கு டெலிட் ஆகும் டொமைன்கள் பல 5 வருடத்திற்கு முன்பு ரிஜிஸ்டர்... 10 வருடத்திற்கு முன்பு ரிஜிஸ்டர் செய்யப்பட்டது என்று கிடைக்கும்.
தினமும் 1 இலட்சத்திற்கும் மேலான டொமைன் டெலிட் ஆகிக் கொண்டிருக்கும் இடத்தில் எப்படியும் 10 நல்ல பொதுப் பெயர் டொமைன் மற்றும் அஜாக்கிரதையாக புதுப்பிக்கப்படாமல் கூட டெலிட் ஆகிவிடலாம்.
5 வருடத்திற்கு என்று டொமைன் ரிஜிஸ்டர் செய்தவர் ... அதனை நிர்வாகம் செய்யத் தெரியாமல், அதனால் வருவாய் இல்லை என்று அப்படியே புதுப்பிக்காமல் விடுவதால் பொதுப் பெயர்கள் கிடைக்க வாய்ப்புகள் இருக்கிறது. ஆகையால் தினம் ஒர் 10 நிமிடம் அதற்கு ஒதுக்கி தினசரி டெலிட் லிஸ்டினை பார்ப்பதன் மூலம் நல்ல டொமைனை மீண்டும் ரிஜிஸ்டர் செய்து கைப்பற்றிக் கொள்ளலாம்.
ஒர் சிலர் அஜாக்கிரதையாக அல்லது கால சூழலால் புதுப்பிக்கப்படாமல் விட்டுவிட்டால் பின்னர் அறியும் பொழுது.. உடனே அதனை ரிஜிஸ்டர் செய்ய விரும்புவர். அதிலும் இரண்டு வருடமாக தன் வெப்சைட் இது என்று பல இடங்களிலும் ப்ரோமேஷன் செய்தவர்கள்... பலரிடம் சொல்லியவர்கள்... புதியதாக ஒர் டொமைன் வாங்கி அதனை ப்ரோமோட் செய்வது எத்தனை கடினம் என்பதனை அறிந்திருப்பதால்.... 500$ என்றுச் சொன்னால் கூட வாங்கிக் கொள்வார்கள். ஏனெனில் ஒர் வெப்சைட் மூலம் மாதம் 1000$ சம்பாதிக்கிறார்கள் என்றுச் சொன்னால்... அந்த டொமைனை விட்டுவிட்டு புதியதாக ஒர் டொமைனில் ஸ்டார்ட் செய்ய வேண்டும் என்றால் மீண்டும் 4 மாதம் - 6 மாதம் கஷ்டப்பட்டப் பின்னரே அந்த 1000$ வருவாயினை எட்ட முடியலாம் அல்லது அதனைவிட காலதாமதம் ஆகலாம். ஆகையால் காலத்தினால் விரயம் ஆகப் போகும் பணத்தினைக் கணக்கில் கொண்டு 500-1000$++ என்று டெலிட் ஆன டொமைனை ரிஜிஸ்டர் செய்தவர்கள் மீண்டும் விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.
இதனால் தான், டொமைன் கேட்சர் இதனை புரிந்து கொண்டு.. அஜாக்கிரதனையாக டெலிட் ஆகும் டொமைனில் பேக்ரவுண்ட் பார்த்து, தளத்தின் கூகுள் பேஜ் ரேங்க் மற்றும் பேக் லிங்க்..(பிறதளத்தில் பதியப்பட்டுள்ள லிங்க்) ட்ராபிக் கீவேர்டு போன்றவற்றினை கணக்கில் கொண்டு சிலர் டெலிட் ஆகக்கூடிய டொமைனை ரிஜிஸ்டர் செய்து 1000$..5000$ என்று விலை நிர்ணயம் செய்து மார்க்கெட்டில் விற்கிறார்கள்.
பெரும்பான்மையான தளங்கள் 3 வருடம் 5 வருடம் என்று வாங்கிவிட்டு நிர்வகிக்காமல் விடுவதால் டொமைன் டெலிட் ஆகும். கண்டிப்பாக ரிஜிஸ்டர் செய்யும் பொழுது நல்லப் பெயராக பார்த்துத்தான் வாங்கியிருப்பார்கள். ஆகையால் அதில் பொதுப்படையாக உள்ள நல்லப் பெயரினை நாம் திரும்பவும் ரிஜிஸ்டர் செய்து கொள்வதுதான் புத்திசாலித்தனம்.
இங்கே இன்னொன்றும் பார்க்க முடியும். அதாவது பிறர் ரிஜிஸ்டர் செய்து வைத்திருந்ததால் தன்னால் ரிஜிஸ்டர் செய்ய முடியாது போனப் பெயர் மீண்டும் கிடைப்பதால் வாங்கக்கூடிய கம்பெனிகளும் இருக்கும். எடுத்துக்காட்டிற்கு kuruvi.in . குருவி என்பது நல்லப் பெயர் மற்றும் இந்தியா என அடையாளம் காட்டும் டாட் இன் டொமைன். நடிகர் விஜய் நடித்த தமிழ் படத்தின் ஒன்றின் பெயர் கூட குருவி kuruvi. அந்த நேரத்தில் ரிஜிஸ்டர் செய்யப்பட்ட இந்த டொமைன்... 2 மே-2015 அன்று டொமைன் ஒனரால் புதிப்பிக்கப்படாத காரணத்தினால் ரிஜிஸ்டர் கம்பெனி டெலிட் செய்துவிட்டது. ஆகையால் தற்பொழுது மீண்டும் ரிஜிஸ்டர் செய்ய கிடைக்கிறது. குருவி என்பது பறவை இனத்தினைக் குறிக்கக்கூடிய நல்லப் பெயர்.. ஒர் இயற்கை ஆர்வலர் ரிஜிஸ்டர் செய்ய நினைத்துக்கூட கடந்த இரண்டு வருடத்தில் ரிஜிஸ்டர் செய்ய கிடைக்காமல் போயிருக்கலாம். வரும் வருடத்தில் கூட அந்த பெயரினை வாங்க பிறர் நினைக்கலாம். ஆகையால் ரூ.750-ஐ ஒர் முதலீடாகப் போட்டு ... இது ஒர் மொழிக்கான ரிஜியன் டொமைன் என்பதால் 100$-250$ ரேட் வைத்து விற்பனை செய்ய முயற்சித்தால் முடியலாம்.
இதைப்போல் 2-மே-2015-இல் டெலிட் ஆன ஒர் சில டொமைன் பெயர்களைப் பார்க்கலாம்.
maduraimeenakshimatrimony.com - Registered 2010 - expired 12-2-2015 (related site > srimeenakshimatrimony.com/)
மதுரைமீனாட்சிமேட்ரிமோனி சைட்டினை 5 வருடத்திற்கு ரிஜிஸ்டர் செய்து வைத்திருந்தவர்... மறந்தோ... அல்லது தளத்தினை சரியாக நடத்தாத காரணத்தினாலோ புதிப்பிக்கவில்லை. இந்த தளத்தின் விவரத்தினை ஆன்லைனில் கொஞ்சம் அலசி ஆராய்ந்து.. இப்பொழுதும் அந்த சைட் நிகழ்வில் இருக்கிறது என்றுச் சொன்னால் உடனே டொமைனை ரிஜிஸ்டர் செய்து வைத்துக் கொள்வதே டொமைன் புக்கியின்/கேட்சரின் புத்திசாலித்தனம். ஏன்னா... 5 வருசமா... வாங்க சார் நம்ம சைட்டுக்கு வாங்க சார் என்று அங்கும் இங்கும் எல்லோரிடம் சொல்லி வைத்து... அந்த பலர் பலரிடம் இந்த சைட்டினை அறிமுகம் செய்ய என்று தொழில் செய்து கொண்டிருப்பவர்.. தெரியாமல் புதுப்பிக்காமல் விட்டுவிட்டால் அந்த வாய்ப்பினை பயன்படுத்தி...650 ரூபாய்க்கு ரிஜிஸ்டர் செய்து 10000++ ரூபாய்க்கு திரும்ப பழைய ஒனரிடம் விற்பதுதான் புக்கியின் புத்திசாலித்தனம்.
bbccenter.com Registered 2002 Expired FEB-2015
BBC பிரபலமான பெயர்.. BBCcenter நல்லப் பெயர்... ரிஜிஸ்டர் செய்து விற்பனைக்கும் வைக்கலாம்.
SenseOfVoice.com Creation Date: 11-feb-2014 Expiration Date: 11-feb-2015
டொமைன் நல்லப் பெயரில் ரிஜிஸ்டர் செய்யப்பட்டு கைவிடப்பட்டுள்ளது.
saainvestments.com Feb-2013 - Expired Feb-2015 (SAAinc.net - SAA Investments Inc)
SAA investments என்றப் பெயரில் ஒர் கம்பெனி கூகுளில் கிடைக்கிறது, ஆனால் அவர்களால் SAAinvestments.com என்ற சரியான டொமைனை ரிஜிஸ்டர் செய்ய முடியாமல் போயிருக்கலாம். தற்பொழுது ரிஜிஸ்டர் செய்து, அவர்களிடம் விற்க முயற்சிக்கலாம்.
FairyBinary.com Creation Date: 13-feb-2011 Expiration Date: 13-feb-2015
steps2work.com registered feb-2012 - Expired Feb-2015
கூகுள் அட்சன்ஸ் என்றப் பெயரில் ஆன்லைன் ஜாப் பற்றிய நல்லப் பெயர்கள் பல ரிஜிஸ்டர் செய்து வெப்சைட்டாக ஒர் வருடத்திற்கு...2 வருடத்திற்கு என்று விற்கப்பட்டன. ஆனால் வெப்சைட்டினை ப்ரோமோட் செய்து வருவாய் பார்க்கத் தெரியாமல் வாங்கியதால்.. அத்தோடு மறந்தவர்கள் பலர். இப்படி நல்லப் பெயர்கள் மீண்டும் ரிஜிஸ்டர் செய்யாத காரணத்தினால் சில டெலிட் ஆகி திரும்பி ரிஜிஸ்டர்க்கு வரும் பொழுது பயன்படுத்திக் கொள்ளலாம். அந்த வகையிலான டொமைன் தான் இது... நல்லப் பெயர்.
EagleGarments.com Registered Feb-2011 - Expired Feb-2015
இகிள் என்பதனை பலர் தொழில் பெயரில் சேர்த்திருப்பார்கள்...அப்படி கார்மெண்ட்ஸ் பிசினசில் இருப்பவர்கள் தொழில் பெயராக கொண்டிருந்தால் நல்ல விலைக்கு போய்விடும். அல்லது பழைய ஓனரே தனது தொழில் பெயர் என்பதால் திரும்ப வாங்க நேரலாம்.
CyberCityBlog.com Registered Feb-2011 - Expired Feb-2015
நல்ல பெயர்
SuicideImages.com Registered Feb-2011 - Expired Feb-2015
நல்ல பொது கீவேர்டு கொண்ட டொமைன்.
friendzcar.com Registered Feb-2013 - Expired Feb-2015 (பாண்டிச்சேரி)
பிரண்ட்ஸ்கார் என்பது நல்லப் பெயர்.. மற்றும் இதேப் பெயரில் பாண்டிச்சேரிலும் ஒருவர் தொழில் நடத்துகிறார் என்பதனை கூகுள் காட்டுகிறது. ஆகையால் ரிஜிஸ்டர் செய்து முயற்சிக்கலாம்.
DancingPearls.com Registered Feb-2013 - Expired Feb-2015
கூகுளில் பிரபலமான கீயாக DancingPearls இருக்கிறது
GirlDressShop.com Registered Feb-2011 - Expired Feb-2015
பயன்பாட்டிலிருந்த தளம் போன்று கூகுளில் தெரிகிறது.
555taxi.com Registered Feb-2013 - Expired Feb-2015
555டேக்சி என்பது நல்லப் பெயர் பிறர் வாங்க முற்படலாம்.
இப்படி டெலிட் ஆகிய டொமைனில் நல்ல டொமைன்களை அலசி ஆராய்ந்து 10 - 100 ரிஜிஸ்டர் செய்து வைத்துக் கொண்டு விற்பனைக்கு விட்டோம் என்றுச் சொன்னால் மாதம் ஒன்று க்ளிக் ஆகி... இலாபம் பார்த்துவிடலாம்.
Registered Again
டெலிட் ஆன டொமைன்களில் சில மீண்டும் உடனே அன்றே ரிஜிஸ்டர் செய்யப்படுகிறதும் நம்மைப்போல் டொமைனை கேட்ச் செய்ய காத்திருப்பவர்களால் நடக்கிறது. அப்படி 2-மே-2015 இல் டெலிட் ஆகி... அன்றே ரிஜிஸ்டர் செய்யப்பட்ட டொமைன் பெயர்களைப் பார்த்தோம் என்றுச் சொன்னால் சிலவற்றின் பெயரில் என்ன இருக்கிறது என்றே தெரியாது.. அதனையும் ரிஜிஸ்டர் செய்திருக்கிறார்கள். அப்படியானால்... அந்த டொமைன் பெயரில் ஏதோ ஒன்று இருக்கிறது. அந்த இழப்பு கூடாது என்பதனால் மீண்டும் ரிஜிஸ்டர் செய்கிறார்கள் அல்லது அந்த ஒன்றிற்காக நம்மிடம் விலைக்கு வாங்குவார்கள் என்று டொமைன் கேட்சர் ரிஜிஸ்டர் செய்திருக்கலாம். நமக்குத் தெரியாத மொழியின் அர்த்தம் நமக்கு தெரியாமல் இருப்பதால் கூட.. அப்பெயரின் உண்மை நமக்கு பிடிபடாத காரணமாகக் கூட இருக்கலாம். எதற்கும் கொஞ்சம் ஆராய்ந்து முடிவெடிப்பது நல்லது... 10 டொமைன் ரிஜிஸ்டர் செய்தோம்... ஒன்றும் கூட விலை போகாவிட்டால்... ஆகையால் நல்ல டொமைன் பெயர் என்று ஆராய்ந்து ரிஜிஸ்டர் செய்ய வேண்டும். (நான் இழந்தது என்பது இது எதுவுமே தெரியாமல் தேவையில்லா டொமைனை ரிஜிஸ்டர் செய்த காரணத்தினால்)
மீண்டும் ரிஜிஸ்டர் செய்யப்பட்ட டொமைன்கள் >
schcbf.com , szxysh.com , qdlfd.com ... ஏதோ சும்மா abcd மிக்ஸ் பண்ணி விட்ட மாதிரி என் கண்ணுக்குத் தெரியுது.
jogodebebe.com , minsuweb.com , numizmatika-literatura.com , chuboren.com , cdsservicos.com... கொஞ்சம் பிற மொழி அர்த்தம் இருக்கிறது என்பது புரிந்து கொள்ள முடிகிறது.
accountabledev.com & aaadecorator.com இரண்டும் கம்பெனி பெயராக இருக்கும் என்பது நன்றாகத் தெரிகிறது.
டெலிட் ஆனவற்றில் முக்கிய டொமைன் என்று நான் நினைக்கும் சில::
tamilmodels.com
மாடலிங்க் துறை வளர்ந்துவிட்ட ஒன்று... தமிழ் உலகில் அத்தொழிலில் இருப்பார்க்கு இந்த டொமைன் உகந்தது.
kalanjiam.in , Vallalar.in , HindustanFoods.in , work4u.in , VillageVoice.in & AskMeAnything.in இவை அனைத்துமே இந்திய நாட்டினர் வாங்கக்கூடிய நல்லதொரு பெயர்கள் தான்.
MUNDANEMATT.COM Expired 2013,(Active Youtube channel with that domain name)
இந்த டொமைன் பெயரில் யூடியூப் சேனல் இயங்கி வருகிறது. ஆகையால் ரிஜிஸ்டர் செய்து வைத்தால் அவர்கள் வாங்கிக் கொள்ளலாம்.
மேல் கொடுத்த அனைத்தினையும் புரிந்து படித்துக் கொண்டால் டொமைனை எப்படி எல்லாம் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்று தெரிந்து கொள்வதோடு இதனை பிலிப்பா, கோடேடி, நேம்சீப்-மார்க்கெட்ப்ளேஸ், சீடோ போன்றவற்றின் மூலம் விரைவாக வருவாய் பார்த்துக் கொள்ளலாம் என்பதனை அறிந்து கொள்ள வேண்டும்.
அடுத்து மற்றொருமுறையும் இருக்கிறது... அது புதியதாக அறிமுகப்படுத்தும் TLD -இல் கிடைக்கும் நல்ல பெயர்களை அன்றே ரிஜிஸ்டர் செய்து மார்க்கெட்டில் விற்பனைக்கு விடுவது
TLD- என்றால் டாப் லெவல் டொமைன். டாட் காம் (.com) ஒர் டாப் லெவல் டொமைன். அதனைப் போல் .info,.net, .org, .tv, .me என்று பல இருந்தாலும் நல்ல பெயர் இல்லா காரணத்தினால் அவ்வப்பொழுது புதிய TLD extension அறிமுகப்படுத்துவார்கள். அப்படி வரும் பொழுது உடனே நாம் பயன்படுத்தி நல்ல பெயரினை ரிஜிஸ்டர் செய்து கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு சமீபத்தில் .website என்றொரு TLD அறிமுகம் செய்தார்கள். உடனே நாம் business.website onlinejob.website, lawyer.website , games.website என்று ஒர் எழுத்து பெயர்களை ரிஜிஸ்டர் செய்து வைத்துக் கொண்டால் 10 மடங்கு அதிக விலையில் உடனே மார்க்கெட்டில் விற்றுவிடலாம்.
என்ன இருந்தாலும் http://bigrock.in/-க்கு இருக்கும் மவுசு மவுசுதான்... அதில் நல்லப் பெயர் வேண்டும் என்றால் அவ்வப் பொழுது டெலிட் ஆகி வருவதில் தான் கிடைக்கும். ஆகையால் அதனை தினசரிப் பார்த்து, நல்ல பெயர்களை ஆராய்ந்து ரிஜிஸ்டர் செய்தால் 10000% இலாபத்தினை பார்த்துவிடலாம்.
தொழிலில் வெற்றி பெற வாழ்த்துகள்
No comments:
Post a Comment